முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்திக்கும் முக ஸ்டாலின்!!

0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சந்திக்க உள்ளார். முதல்வரின் தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்வர் சந்திப்பு:

தமிழகத்தில் அடுத்த வருட மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதீத கவனம் செலுத்தி வருகிறார். கடந்த அக்.13ம் தேதி முதல்வர் அவர்களின் தாயார் சேலம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 1 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 93.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

TamilNadu CM Mother died
TamilNadu CM Mother died

சொந்த ஊரில் வைக்கப்பட்டு இருந்த உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், உறவினர்கள் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தனது தாயாரின் இறுதி ஊர்வலத்தில் மிகவும் சோர்வடைந்த நிலையில் கவலை தோய்ந்த முகத்துடன் சென்ற முதல்வரை பார்த்தவர்கள் கண் கலங்கினர். முதல்வரின் தாயார் மறைவிற்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

3,000 மாணவர்களுக்கு இறுதிப்பருவ முடிவுகள் நிறுத்தி வைப்பு ஏன்?? அண்ணா பல்கலை விளக்கம்!!

தாயாரை இழந்து வாடும் முதல்வர் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக ஏற்கனவே ஆறுதல் கூறி இருந்த நிலையில், இன்று நேரில் சந்திக்க உள்ளார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here