Wednesday, March 27, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் – 26 பேர் அதிரடி கைது!!

Must Read

கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதியதாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்ற 40 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு:

கடந்த 2017 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2A மற்றும் விஏஓ தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. அந்த தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்த முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாக இருந்த காவலர் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன், இடைத்தரகர் ஜெயகுமார் இவர்கள் உட்பட 51 பேர் சிபிசிஐடி போலீசாரால் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்திக்கும் முக ஸ்டாலின்!!

அடுத்தடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பாலிடெக்னிக் தேர்வு, குரூப் 2 தேர்வு, பொறியாளர் தேர்வு, குரூப் 4 தேர்வு என்று பல தேர்வுகளில் இவர்கள் ஆள்மாறாட்டம் செய்து குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பலரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து தேர்வர்களை முறைகேடாக வெற்றி பெற செய்துள்ளனர். இப்படி முறைகேடாக வெற்றி அடைந்து அரசு பணிகளில் இருக்கும் பணியாளர்களை தேர்வாணையம் சஸ்பெண்ட் செய்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அச்சம் காரணமாக கிடப்பில் போடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

26 பேர் கைது:

அதன்படி கடந்த 10 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் 26 பேர் முறைகேடாக அரசு பணிகளில் தேர்வு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அந்த 26 நபர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ராமநாதபுரம், கீழக்கரை போன்ற தேர்வு மையங்களில் தான் முறைகேடு நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.

3,000 மாணவர்களுக்கு இறுதிப்பருவ முடிவுகள் நிறுத்தி வைப்பு ஏன்?? அண்ணா பல்கலை விளக்கம்!!

அவர்கள் அனைவருக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கூடுதலாக தற்போது கொரோனா காலம் என்பதால் அவர்கள் அனைவருக்கும் நிபந்தனைகள் அற்ற ஜாமின் மூலமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இது போன்ற முறைகேடுகள் நடைபெற்றதாக 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 40 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்தியது முதல் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -

TNPSC Group 4 Online Courses @6000 Only

X