Friday, April 26, 2024

மருத்துவ படிப்புகளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க விரைவில் ஆளுநர் ஒப்புதல் – அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!!!

Must Read

மருத்துவ படிப்புகளில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் 300க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வுகள்:

கடந்த மாதம் நீட் தேர்வு பல எதிர்ப்புகளை மீறி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வுகள் வெளியிடப்பட்டதால், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஆனால், இந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இது குறித்த வழக்கின் அடிப்படையில் ஆளுநரின் அனுமதி கிடைக்கும் வரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என்று தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.

அமைச்சர்கள் வலியுறுத்தல்:

இதனையடுத்து தொடர்ச்சியாக கோரிக்கை எழுந்து வந்ததால் தமிழகத்தில் உள்ள முக்கிய அமைச்சர்களான கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், சி.வி,சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவ மாணவர்களின் நலனுக்காக விரைவாக இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக ராஜ்பவன் சென்று ஆளுநரிடம் இது குறித்து பேசியுள்ளனர்.

யூடூப் சேனல் தொடங்கும் சிலம்பரசன் – ரசிகர்கள் உற்சாகம்!!

இதனை அடுத்து அமைச்சர்களின் கோரிக்கையினை ஏற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த மசோதாவினை விரைவில் அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் கோடை வெயிலை எதிர்கொள்வதற்கான சிறப்பு நடவடிக்கை., முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர கடும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -