ஒரே வாரத்தில் பட்டுபோன்ற சருமத்தை பெற வேண்டுமா?? இதோ ஆயுர்வேத டிப்ஸ்!!

0
nazriya nazim

முக அழகை பராமரிக்க நாம் கண்ட பொருட்களை பயன்படுத்துவதால் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் நம் உணவு பழக்கங்களுக்கும், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் சம்மந்தம் உள்ளது. ஏனெனில் அதிகப்படியான எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுவதால் சருமத்தில் எண்ணெய் பிசுக்கு ஏற்பட்டு சரும அழகை பாதிக்கும். இப்பொழுது ஆயுர்வேத முறையில் முக அழகை எப்படி வசீகரமாக்குவது என்பதை பார்க்கலாம்.

முக அழகை வசீகரமாக்க…

நமது முக அழகை பராமரிப்பதற்கு கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதை விட நம் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி முகத்தை வசீகரமாக்கலாம். மேலும் நாம் எவ்வளவு தான் முகத்தை பராமரித்து வந்தாலும் நமது உணவு பழக்கம் மிக முக்கியமாகும்.

face wash
face wash

நேரத்திற்கு சாப்பிடுவது, வெளியில் சென்று வந்தால் கை கால்களை கழுவுவது, சரியான துக்கம் போன்றவை மிக முக்கியம். எனவே தான் முகத்தை அழகாக்க முக்கியமான ஒன்று எண்ணெய் பதார்த்தங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இப்பொழுது எளிய வகையில் முகத்தை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

dark circles
dark circles
  • முதலில் பன்னீர் ரோஜாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் இதழ்களை தனியாக எடுத்து அதில் பால் மற்றும் தேனை சேர்த்து அரைத்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகம் உடனடியாக பளிச்சென்று மாறும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே போதுமானது.
  • கற்றாழையை எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் சீவி அதில் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் நீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவி வந்தால் முகம் இயற்கையாகவே பொலிவு பெரும். இறந்த செல்கள் அகலும்.
face wash
face wash
  • சந்தன பவுடரை எடுத்துக் கொள்ளவும். பாதாமை அரைத்து அந்த சந்தன பவுடரில் சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தலே போதும். முகத்தில் ஆங்காங்கே இருக்கும் கருமை நீங்கும்.
  • அடுத்ததாக பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். அதில் முட்டை வெள்ளைக்கரு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முகமும் பொலிவுடன் இருக்கும்.
  • மேலே கூறப்பட்டுள்ள இந்த முறைகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வந்தால் முகம் பட்டுப்போல ஜொலிக்கும். மேக்கப் போடவேண்டிய அவசியமும் இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here