சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க 100% வாய்ப்பில்லை – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

0

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்த்துக்கொள்ள 100% வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியுடன் சசிகலா மற்றும் தினகரன் இல்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்ற எழுச்சி அதிமுகவில் இன்று வரை இருக்கிறது. தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதிமுக மற்றும் பாஜக பற்றி கிளம்பும் வதந்திகள் அளவுக்கு, பாஜக அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிடுவது இல்லை. அதேபோல அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைப்பதற்கு 100% வாய்ப்புகள் இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ஷூட்டிங்கில் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!!

இதுவே உறுதியானது. இதில் எந்த மாற்றமும் இல்லை. அமமுக தலைமையில் கூட்டணி என்று நேற்று தினகரன் பேசியிருந்தார். இந்த பேச்சை மக்கள் நகைச்சுவையாகத்தான் எடுத்துக்கொள்வார்கள். கட்சியை பொருத்தளவு கொள்கை வேறு, கூட்டணி வேறு. பாஜக கட்சி கூட்டணியில் ஒரு அங்கம் தான். எங்கள் தலைமையின் கீழ் பாஜக இருக்கிறது. கட்சியின் விவகாரங்களில் பாஜக தலையீடு இல்லை. அதிமுகவிற்கு என கொள்கை, லட்சியம் இருக்கிறது. பாஜகவுடனான தொகுதிப்பங்கீடு சுமூகமாக நடைபெறுகிறது’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here