கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கபில்தேவ் – வைரலாகும் புகைப்படம்!!

0

இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோயாளிகளுக்கும் கடந்த 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கொரோன தடுப்பூசியை போட்டு கொண்டார்.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதனை அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் முதல் கட்டமாக மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள் போன்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இரண்டாவது கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இணைநோய்களுடன் போராடும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 1ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட முதல் நாளில் முதலாவதாக நாட்டின் பிரதமர் மோடி தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

இவரை தொடர்ந்து மந்திரிகள், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தற்போது தடுப்பூசியை போட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் டெல்லியில் உள்ள ஓக்லா என்னும் பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸில் என்னும் மருத்துவமனையில் தடுப்பூசியை போட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here