தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது – கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை..!

0
Medical Team
Medical Team

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சம் அடைந்து உள்ளதாக முதல்வர் அவர்களுடான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவக்குழு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்குநாள் புதிய வீரியம் அடைந்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜூன் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் அவர்கள் கொரோனா பாதிப்பு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவினருடன் 5வது முறையாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Conference
Conference

அப்பொழுது தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு உச்சத்தை அடைந்து உள்ளது எனவும் அது குறையத் தொடங்கும் என தெரிவித்து உள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்த 3 மாதங்களுக்குப் பிறகு அதன் 2வது அலை தொடங்கும் எனவும், தற்போது 75,000 படுக்கை வசதிகள் தமிழகம் முழுவதும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா – தமிழ்நாடு முழுவதும் பரவலா..?

மக்கள் தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும் தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூட ஆக்சிஜன் சிலிண்டர் தயாராக இருப்பதாக மருத்துவக்குழு பிரதிநிதி அவர்கள் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here