அரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா – தமிழ்நாடு முழுவதும் பரவலா..?

0

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தோற்று தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஜூன் 30 வரை பல தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் அரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா பரவி வருகிறது.

ஊரடங்கு

மார்ச் 24 முதல் நாடுகள் எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு காலங்களில் மருத்துவர்கள், போலீசார் எனா பலருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

lockdown
lockdown

ஆனால் தற்போது பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 அரை நீடித்திருந்த நிலையில் அரசு பேருந்து நடத்துனர்களுக்கும் கொரோனா பரவி உள்ளது. இந்த கொரோனா காலத்தில் இந்த தளர்வுகள் மிக ஆபத்தானவை என பல்வேறு துறை வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர்.

நடத்துனர்கள்

தற்போது பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் உள்ள செவ்வாறு வட்டம் பனிமலையில் 5 நடத்துனர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அனைத்தும் மூடப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ஏற்படுத்தியுள்ள ஊரடங்கு தளர்வு காரணமாக கொரோனா அதிகமாக பரவுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

bus conductors
bus conductors

மேலும் கடைகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் என மக்கள் நேரடியாக தொடர்பு கொள்பவர்களிடம் பரவ தொடங்கியுள்ளது. இது சமூக பராவலாக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு 100 சதவீதம் முடியும் வரை ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார துறை அறிவித்திருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் அரசின் நடவடிக்கை, மக்கள் இயல்பாக எந்த பயமுமின்றி நடமாட வழிவகை செய்திருக்கிறது. இதனால் கொரோனா பரவல் தீவிரமெடுக்கும் என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்ததோடு ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here