Tuesday, May 28, 2024

தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் தொடங்கியது – சேர்க்கை ஆணையை வழங்கும் முதல்வர்!!

Must Read

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு உட்பட அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இன்று முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மூன்று நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு:

இந்த ஆண்டு கொரோனா பரவல் மற்றும் பலரது எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகளில் அரசு வழங்கிய இலவச பயிற்சி மையங்களில் படித்த அரசு பள்ளி மாணவர்கள் பலரும் நல்ல மதிப்பெண்களோடு வெற்றி பெற்றனர். இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டினை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் அந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளார்.

ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்திய சசிகலா – விரைவில் விடுதலை??

தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கலந்தாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான தரவரிசை பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதனால் கலந்தாய்வுகள் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 34,424 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் 3,650 இடங்களுக்கு கலந்தாய்வுகள் நடைபெற உள்ளன. இன்று 900 திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வுகள் நடைபெற உள்ளன.

கலந்தாய்வு விவரங்கள்:

இந்த கலந்தாய்வுகள் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும் தினமும் 500 மாணவர்கள் பங்கேற்பர் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மாணவர்களுக்கு கலந்தாய்வுகள் நடைபெறவுள்ளன. அதன் படி இன்று,

  1. காலை 9 மணி முதல் 11 மணி வரை – தரவரிசையில் 1 முதல் 151 இடங்களில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வுகள் நடைபெறும் – நீட் தேர்வில் 644 முதல் 249 மதிப்பெண்கள் பெற்றவர்கள் – அனைவரும் அரசு பள்ளி மாணவர்கள்.
  2. நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை – தரவரிசையில் 268 முதல் 633 இடங்களில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வுகள் நடைபெறும் – நீட் தேர்வில் 189 முதல் 133 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
  3. வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை – தரவரிசையில் 634 முதல் 951 இடங்களில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வுகள் நடைபெறும் – நீட் தேர்வில் 132 முதல் 113 மதிப்பெண்கள் பெற்றவர்கள்.

இந்த கலந்தாய்வுகளில் மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் அவரகள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையினை பிற்பகலில் முதலமைச்சர் பழனிசாமி மாணவர்களுக்கு வழங்க உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC GROUP – 4 முக்கியமான கேள்விகள் Part – 1

https://www.youtube.com/watch?v=JiBJwX7i6_A&list=PLGQqnHwTsGy_vnwMHa_Ac_HjCuIoUEZif&index=3 TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -