Saturday, May 4, 2024

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்கலாம் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!!

Must Read

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் தற்போது மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுமதி வழங்கி கடிதம் ஒன்றை அளித்துள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு மக்களால் பின்பற்றபட்டு வருகின்றது. நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையில் கூட பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனை அடுத்து கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பின்பற்றபட்டு வருகின்றது. நாடு முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்து வருகின்ற மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ கவுன்சில் மத்திய அரசிற்கு பரிந்துரை வழங்கியது. இதனை ஏற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்று நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து அரசுகளுக்கும் இது குறித்து ஒரு கடிதத்தினை அனுப்பியுள்ளது. அதில் மாநில அரசுகள் வரும் டிசம்பர் 1 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ மருத்துவ கல்லூரிகளை திறக்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று இந்த கடிதத்தினை அனைத்து அரசுகளுக்கும் வழங்கியுள்ளது.

வகுப்புகள் தொடக்கம்:

அதே போல் இளங்கலை மருத்துவ மாணவர்கள் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெறவிருக்கும் “நீட்” தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். இதன் காரணமாக வரும் டிசம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகளை திறந்தாக வேண்டும். அதே போல் தற்போது பயில இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் மருத்துவராக எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் வகுப்புகள் மற்றும் பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கான மேற்படிப்பிற்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி!!

மருத்துவ கல்லூரிகளை திறப்பதற்கான காரணம் வகுப்புகள் நடத்த தாமதம் ஏற்பட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு 80 ஆயிரத்திற்கும் குறைவான மருத்துவர்களே வரக்கூடும். இதனால் பின்னாளில் பல பாதிப்புகள் ஏற்படும். இதனை தவிர்க்கவே கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இந்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் முறையாக கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -