சிங்கம் பட பாணியில் ‘சாகசம்’ – போலீஸ் எஸ்.ஐ.,க்கு அபராதம்..!

0

சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஹீரோ வருவது போல ஓடும் இரண்டு கார்கள் மீது நின்று சாகசம் செய்த மத்திய பிரதேச போலீஸ் எஸ்.ஐ க்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ஹீரோ சாகசம்:

மத்தியபிரதேசம் மாநிலம் டமோஹ் மாவட்டத்தில் உள்ள நரசிங்கர் போலீஸ் ஸ்டேஷனில் துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் மனோஜ் யாதவுக்கு சினிமாவில் ஹீரோக்கள் செய்வது போல் சாகசம் செய்ய வேண்டும் என விபரீத ஆசை ஏற்பட்டு உள்ளது. அதனால் தமிழில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஹீரோ அஜய் தேவ்கன் செய்தது போன்று இரண்டு ஓடும் கார்களின் மேல் நின்று சென்று வீடியோ எடுத்துள்ளார். அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்.

அந்த வீடீயோவைப் பார்த்த உயர் அதிகாரிகள் அவரை கண்டித்து அறிவுரை கூறி உள்ளனர். இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக விளங்கக்கூடாது என கூறி 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here