தெலுங்கில் வெளியான மாஸ்டர் ‘சிட்டி ஸ்டோரி’ பாடல் – இணையத்தில் வைரல்!!

0

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கொரோனா காரணமாக நிலுவையில் உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், தெலுங்கிலும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அதில் இடம் பெற்றுள்ள ‘சிட்டி ஸ்டோரி’ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மாஸ்டர் திரைப்படம்:

தமிழில் விஜய்க்கு கடைசியாக வெளியான படமான பிகில் மாஸ் ஹிட் அடித்தது. 200 கோடிக்கு மேல் வசூலை எட்டியது. தொடர்ந்து 2 படங்களை அட்லி தான் இயக்கியிருந்தார். அடுத்த படத்திற்கும் விஜயிடம் கதையை சொல்ல வர, விஜய் மறுத்து விட்டதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு தான் மாநகரம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார் விஜய்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தில் முதன்முதலாக அவருடன் ஜோடி சேருகிறார் மாளவிகா மோகனன். அனிருத் இசையமைப்பில் பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்துள்ளது. மேலும் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிப்பதே கூடுதல் எதிர்பார்ப்பு. அதுமட்டுமல்லாமல் சாந்தனு, 96 பட கௌரி போன்றோரும் நடித்துள்ளனர்.

இதனாலேயே படத்திற்கு ஏக வரவேற்பு. மார்ச் மாதத்திலேயே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. ஜூன் மாதத்தில் படம் வெளியாக இருந்த நேரத்தில் திடீரென கொரோனா பரவலால் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. நவம்பர் மாதத்தில் மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தையே கலக்கியது. மேலும் மாஸ்டர் திரைப்படம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெளியாகவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்திற்கு திடீர் உடல்நலக்குறைவு – அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!!

இந்நிலையில் தமிழில் மாஸ்டர் படத்தில் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் தெலுங்கில் சிட்டி ஸ்டோரியாக உருவாகியுள்ளது. இந்த பாடலை அனிருத் மற்றும் ஷாம் விஷால் பாடியுள்ளார். ஜனவரியில் 13ஆம் தேதி பொங்கலன்று இந்த படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதுவும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here