குக் வித் கோமாளிக்கே போட்டியா?? சன் டிவி வெளியிட்ட மாஸ்டர் செஃப் ப்ரோமோ!!

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சி மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் செஃப்

விஜய் டிவியில் பிளாக் பஸ்டர் ஹிட் ஷோ குக் வித் கோமாளி. இந்த சமையல் நிகழ்ச்சியில் சமையலை விட நகைச்சுவைக்கு தான் அதிக ரசிகர்கள் உண்டு. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வரும் திரையுலக பிரபலங்களையும் சும்மா சொல்லக்கூடாது. ஒவ்வொரு குக்குகளும் சமையலில் அசத்தி வருகின்றனர். குக் வித் கோமாளி போட்டியாளர்கள் இந்தியன் ரெசிபியிலிருந்து கான்டினென்டல் வரை எல்லாவகை சமையலிலும் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு உலகத்தரம் வாய்ந்த நிகழ்ச்சி என்று சொன்னால் மிகையாகாது. இந்த நிகழ்ச்சிக்கு கடல்களை கடந்தும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் பிரபல சன் தொலைக்காட்சி நிறுவனம் மாஸ்டர் செஃப் என்ற புது சமையல் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த உள்ளது. மாஸ்டர் செஃப் என்பது அமெரிக்காவில் ஒளிப்பரப்பப்படும் பிரபல சமையல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

‘குக் வித் கோமாளி’ பைனலுக்கு செலக்ட்டான அஷ்வின் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தற்போது தமிழ் மொழியிலும் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. சன் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. என்னதான் உலக புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் குக் வித் கோமாளிக்கு இணையாக வருமா என குக் வித் கோமாளி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here