‘குக் வித் கோமாளி’ பைனலுக்கு செலக்ட்டான அஷ்வின் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இந்த வாரம் செமி பைனல் சுற்று நடைபெற உள்ளது. இந்த வாரம் முடிவில் அஷ்வின் மற்றும் கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனலுக்கு சென்றுள்ளனர்.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் கிங்காக இருக்கும் ஷோ என்றால் அது ‘குக் வித் கோமாளி’ தான். மக்களின் மனம் கவர்ந்த ஷோவாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தகவலால் குக் வித் கோமாளி ரசிகர்கள் இப்போதிலிருந்தே புலம்ப ஆரம்பித்துவிட்டனர். குக் வித் கோமாளி சீசன் 1 வெற்றிக்கு பிறகு, புதிய குக் மற்றும் கோமாளிகளுடன் கடந்த ஆண்டு இதன் இரண்டாவது சீசன் துவங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சீசனின் அனைத்து எபிசோடுகளும் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீசனில் முன் இல்லாத அளவுக்கு கோமாளிக்கு நிகராக குக்குகளும் நிகழ்ச்சியின் ஜட்ஜ்களும் போட்டிபோட்டு கலக்கி வந்தார்கள்.

என்ன இப்படி டிரஸ் மாத்துறீங்க – கலர்கலர் உடையில் கலக்கும் சமந்தா!!

அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ஃபன் மற்றும் கலாட்டா நிறைந்த எபிசோடுகளில், ஒவ்வொரு குக்காக வெளியேற்றப்பட்டு வந்தார்கள். 8 போட்டியாளர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி தற்போது செமி பைனலை எட்டியுள்ளது. செமி பைனலில் அஷ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இருவர் பைனலுக்கு செல்ல ஒருவர் வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த எபிசோடுகள் இன்றும் நாளையும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் அஷ்வின் மற்றும் கனி இடம்பிடித்துள்ளார்கள். இணையத்தில் வெளியான இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here