இந்த வயசுல இதெல்லாம் தேவையா டிடி – பிகினியில் ரீல்ஸ் செய்து அட்டகாசம்!!

0

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளியான திவ்யதர்ஷினி தற்போது மாலத்தீவுகளில் தனது விடுமுறை தினத்தினை கொண்டாடி வருகின்றார். அங்கு சென்ற டிடி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி அணிந்துள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளினி டிடி

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் தான், தொகுப்பாளினி டிடி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமாத்துறையில் தான் அறிமுகமானார். இவர் தமிழில் ‘விசில்’ திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்பு தொடர்ச்சியாக ‘நள தமயந்தி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி அடைந்திருந்தாலும் இவர் சினிமா துறையில் தனது கவனத்தினை செலுத்தவில்லை.

மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

Divyadarshini -> DD - Home

அதற்கு மாறாக, இவர் நிகழ்ச்சிகளை தொகுக்கும் வேலையில் கவனம் செலுத்தினார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். இவரது தொகுக்கும் பாங்கு, யதார்த்தமான பேச்சு மற்றும் குறும்பான செயல்கள் மூலமாக ஒரு தொகுப்பாளினியாக இவர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் மிகவும் பிரபலமடைந்தது “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலமாக தான். இதனை அடுத்து இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மனம் ஒத்து பிரிந்து விட்டனர். இப்படியாக இருக்க, தற்போது மீண்டும் தொகுப்பாளராக ரீஎண்ட்ரி கொடுத்து இருக்கும் டிடி கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் தான் மாலத்தீவுகளுக்கு சென்றுள்ள அனுபவத்தினை பகிர்ந்து வருகின்றார்.

மாலத்தீவுகளில் உள்ள சிறப்பம்சங்களையும் பற்றி விவரித்து வருகிறார். இந்த வீடியோ ஆரம்பித்த போது அவர் மாலத்தீவுகள் செல்வதனால் பிகினி எதிர்பார்க்காதீர்கள் என்று தான் கூறியிருந்தார். ஆனால், தற்போது பிகினி அணிந்து ரீல்ஸ் செய்துள்ளார். இதனை அடுத்து அந்த பதிவு வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here