‘மம்தாவை யாரும் தாக்கவில்லை’ – சம்பவத்தை நேரில் பார்த்தவர் சாட்சி!!

0

மேற்கு வங்க மாநில முதல்வரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மம்தாவை யாரும் தாக்கவில்லை என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சாட்சி கூறியுள்ளார்.

மம்தா தாக்குதல்

மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா நேற்று நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். காவலர்கள் யாரும் அருகில் இல்லாதபோது அங்கு வந்த மர்ம நபர்கள் மம்தாவை தாக்கியதில் அவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் குறித்து மம்தாவே தெரிவித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘இது பாஜகவின் சதி வேலை’ என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகையில், ‘இது அரசியல் நாடகம்’ என்கிறது பாஜக. இந்நிலையில் மம்தாவை யாரும் தாக்கவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சாட்சி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மம்தா பயணித்த காரின் கதவு சாலையோரம் உள்ள தூண் ஒன்றில் மோதியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க திட்டம் போடும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிலை??

அவரை யாரும் தாக்கவில்லை’ என தெரிவித்துள்ளார். முன்னதாக மேற்கு வங்கத்தில் ஆளும் அரசான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் நடந்துள்ள இத்தகைய சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது என மக்களிடையே கருத்துக்கள் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here