பள்ளி குழந்தைகளுக்கு அசைவ உணவு கட்டாயம் – கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

0

சீனாவில் பள்ளிகளில் கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு கட்டாயமான முறையில் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும் என்று சீன கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சீனா:

சீனாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளிகளில் அசைவ உணவு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர் . சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள பள்ளிகளில் கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு அசைவ உணவிற்கு மாறாக சைவ உணவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிக்குழந்தைக்கு அசைவ உணவு தான் வழங்க வேண்டும் என்று அங்கு ஓர் சட்டமே உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அந்த பள்ளி மீறியுள்ளது. கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு பால், முட்டை போன்ற உணவுகளுடன் நிறுத்தாமல் மீன் இறைச்சி போன்ற புலால் உணவுகளையும் வழங்க வேண்டும். ஆனால் இதனை அந்த பள்ளி நிர்வாகம் செய்ய தவறியது. இந்நிலையியல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என்று பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

மஹாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மார்ச் 15 முதல் ஊரடங்கு உத்தரவு!!

இதனை அடுத்து தற்போது கல்வித்துறை அந்த பள்ளிக்கு ஓர் உத்தரவை அளித்துள்ளது. அதன்படி இனி கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு அசைவ மற்றும் சைவம் கலந்த உணவை மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த உத்தரவினால் குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here