Friday, May 3, 2024

சுதந்திரம் பெற்று தந்த “அகிம்சை நாயகன்” பிறந்ததினம் – சிரம் தாழ்த்தி வணங்குவோம் இன்று!!

Must Read

கதர் ஆடை, சிறிய மூக்கு கண்ணாடி என்று எளிமையின் சிகரமாய் இருந்தவர், அந்த எலும்பு தோல் உடலில் எவ்வளவு மன உறுதி, அவரது ஒப்பற்ற உறுதி காரணமாக தான் நாம் இன்று சுதந்திரமாக இந்த பாரத மண்ணில் வாழ்கின்றோம். தேசத்தந்தை “மகாத்மா காந்தி” அவர்களின் 151 ஆம் பிறந்ததினம் இன்று.

அகிம்சை எனும் ஆயுதம்:

அனைத்து குணநலன்களும் பெற்று பிள்ளை பெறுவது சிலருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று. அந்த வகையில் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்லிபாய் இந்த நாடு போற்றும் ஒரு உத்தமனை பெற்றார்கள். இவர்களது வளர்ப்பு தான் காந்தியை ஒரு சிறந்த மனிதராக மாற்றியது என்று சொன்னால் மிகையாகாது. படிப்பில் சுமாரான மாணவராக இருந்தாலும் ஒழுக்கத்தில் சிறந்த சிறுவனாக இருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பின் பாரிஸ்டர் என்னும் வழக்கறிஞர் படிப்பு படிப்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு இந்தியர்கள் சந்திக்கும் கொடுமையை பார்த்து வேதனை அடைந்து அதனை களைய பல போராட்டங்களை நடத்தினார். அவர் கத்தி ஏந்தவில்லை, பீரங்கி கொண்டு சண்டைக்கு யாரையும் அழைக்கவில்லை, ரௌத்திரமாக போராடவில்லை, இவை அனைத்திற்கும் மாறாக அகிம்சை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தினார்.

கத்தியின்றி ஒரு யுத்தம்:

கத்தி வைத்து சண்டை போட்ட இந்தியர்களை கண்டு பயப்படாத வெள்ளையர்கள் அகிம்சை வழியில் போராடிய காந்தியை கண்டு மிரட்சி அடைந்தனர். அவர் கம்பு ஊன்றி வழி நடத்த அத்தனை இந்தியர்களும் அவர் பின் நடந்தனர். பலவித வேறுபாடுகளை உடைய இந்தியா மக்களை ஒன்றிணைப்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை. அதனை காந்தி செய்தார். மதம், இனம், சாதி என்று அனைத்தையும் மறந்து இந்திய மக்கள் அந்த அகிம்சை தலைவனின் பின் நடந்தனர்.

மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?? இன்று சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் உடன் மோதல்!!

சுதந்திரம் அடைந்தனர். இந்த நாட்டிற்கும் நட்டு மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தனது 80 வயதில் தான் போராடினார். சாதனை செய்யவும், சேவை செய்யவும் வயது ஒரு தடை இல்லை என்பதை மக்களுக்கும், இன்றைய இளைஞர்களுக்கும் செயலினால் உணர்த்தியவர். இன்று அவரது 151வது பிறந்ததினம். இதனை அனைத்து மக்களும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -