மணமணக்கும் “மதுரை மட்டன் கறி தோசை” ரெசிபி – வீட்லயே செஞ்சு அசத்துங்க!!

0

கறி தோசைனாலே அது மதுரைல மட்டும் தாங்க ஸ்பெஷல். அதுக்காக கறிதோசை சாப்பிடுறதுக்கு எல்லாரும் மதுரைக்கு போக முடியாதுல?? அதனால என்ன ?? வீட்லயே செஞ்சு குடுத்து குடும்பத்தோட என்ஜாய் பண்ணலாம் வாங்க !!!!

என்னதான் விதவிதமா சப்பிட்டாலும் நம்ம டெய்லி சாப்பிடுற தோசை தாங்க நெறைய பேருக்கு பேவரட். ஆனா டெய்லி ஒரே மாதிரி சாப்பிட்டா வெறுப்பா இருக்கும் இல்லையா, கவலைய விடுங்க “மதுரை மட்டன் கறி தோசை” செஞ்சு குடுத்து உங்க குடும்பத்தையே அசத்துங்க!!! அத எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கா ??? வாங்க பாக்கலாம்…!

தேவையான பொருட்கள்:

மட்டன் -1/2 கிலோ
வெங்காயம் -100 கி
தக்காளி – 2
இஞ்சி,பூண்டு விழுது -2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் -1 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
முட்டை – 1
கரம் மசாலா -1 டேபிள் ஸ்பூன்
தோசை மாவு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
சோம்பு – 1 டீ ஸ்பூன்
மல்லித்தூள் -2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மட்டனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும். பிறகு, அதில் வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிறகு, கரம் மசாலா, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். மசாலாவில் பச்சை வாடை போன பின்பு மட்டன், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும். தண்ணீர் வற்றி மட்டன் வெந்து கிரேவி பதத்திற்கு கறி வந்ததும் இதை தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான “லேயர் கோதுமை பரோட்டா” ரெசிபி!!

பிறகு தோசைக்கல்லை காய வைத்து, அதில் கொஞ்சம் தோசை மாவை ஊத்தப்பம் பதத்திற்கு ஊற்றி, சிறிது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். இப்போது வைத்திருக்கும் கறி கிரேவியை தோசையின் மேலே ஊற்ற வேண்டும். பிறகு ஒரு முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

அதில், சிறிது உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து அடித்து தோசையின் மேல் ஊற்றி வேக விட வேண்டும். ஒரு பக்கம் தோசை வெந்ததும் கவனமாக திருப்பி மறு பக்கம் வேக விட வேண்டும். இப்போது, வீடே மணக்கும் சூப்பரான ” மதுரை மட்டன் கறி தோசை ” ரெடி. சூடா சாப்பிட்டால் ரொம்ப அருமையா இருக்கும். பரிமாறும் போது மேலே சிறிது மல்லித்தழை சேர்த்து பரிமாற வேண்டும்.

இதே செய்முறையிலேயே மட்டனுக்கு பதில் சிக்கன் சேர்த்தும் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here