இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ்….,ரசிகர்கள் நெகிழ்ச்சி!!

0
இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ்....,ரசிகர்கள் நெகிழ்ச்சி!!
இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ்....,ரசிகர்கள் நெகிழ்ச்சி!!

நடிகர் விஜயின் ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த மிஷ்கினுக்கு நன்றி கூறி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லியோ திரைப்படம்

நடிகர் விஜய் நடித்து வரும் 67 ஆவது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ‘லியோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து நடிகை த்ரிஷா, அர்ஜுன், இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடித்து வருகின்றனர். அந்த வகையில், ‘லியோ’ திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து, இயக்குனர் மிஷ்கினுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

ரயில் பயணிகளுக்கு ஷாக்., மொத்த பிளானும் நாசமா போச்சு? திடீர் முடிவால் புலம்பும் பொதுமக்கள் !!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாகவும், அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன். நீங்கள் படப்பிடிப்பில் இருந்தது உற்சாகமாக இருந்தது. இதற்காக நான் உங்களுக்கு ஒருபோதும் நன்றி சொல்ல முடியாது. இருந்தாலும் ஒரு மில்லியன் நன்றி சார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here