லைகா தயாரிப்பு நிறுவனத்தின் அப்டேட் நாளை வெளியீடு….,ஒருவேளை இதுவா இருக்குமோ?…,

0
லைகா தயாரிப்பு நிறுவனத்தின் அப்டேட் நாளை வெளியீடு....,ஒருவேளை இதுவா இருக்குமோ?...,
லைகா தயாரிப்பு நிறுவனத்தின் அப்டேட் நாளை வெளியீடு....,ஒருவேளை இதுவா இருக்குமோ?...,

லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நாளை காலை 10.30 மணியளவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

திரைப்பட அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா கத்தி, வடசென்னை, எந்திரன் உள்ளிட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்களை தயாரித்துள்ளது. அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் அவர்களின் மாஸ்டர் பீஸ் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ முதலாம் பாகத்தையும் லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பல கோடிகளை குவித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், தமிழ் சினிமா தயாரிப்பில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் லைகா தயாரிப்பு நிறுவனம் நாளை (மார்ச் 2) காலை 10.30 மணியளவில் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது நடிகர் ரஜினியின் ‘லால் சலாம்’, நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ்….,ரசிகர்கள் நெகிழ்ச்சி!!

இந்நிலையில், லைகா நிறுவனம் நாளை வெளியிட இருக்கும் அறிவிப்பு இந்த திரைப்படங்களுக்கானதாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கு முன்னதாக, ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாவதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பும் நாளை வெளியிடப்படலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here