அந்த மனசு தான் சார் கடவுள்.. இரட்டையர்களை தனது இயக்குனராக்கி அழகு பார்த்த ராகவா லாரன்ஸ்!!

0

தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து கொண்டு வரும் ராகவா லாரன்ஸ் தற்போது துர்கா என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த திரைப்படம் குறித்தான தகவலை லாரன்ஸ் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

துர்கா திரைப்படம்:

நடன கலைஞரான லாரன்ஸ் தற்போது சில வருடங்களாகவே ஹார்ரர் திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்தார். இப்படி இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே அதிக அளவில் வெற்றியையே கொடுத்தது. தற்போது லாரன்ஸ் ருத்ரன், அதிகாரம், துர்கா ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். துர்கா திரைப்படத்தின் முதல் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியிடப்பட்டது.

போஸ்டரை தொடர்ந்து தற்போது துர்கா திரைப்படம் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர்களாக சினிமாவில் பணி புரிந்த இரட்டையர்கள் அன்பறிவு தான் இந்த திரைப்படத்தை லாரன்ஸ் கொடுத்த வாய்ப்பினால் இயக்கிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது தயாரிப்பிலேயே இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக லாரன்ஸ் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here