வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கவுள்ள விக்ரம் பட இயக்குனர் – வெளியான அறிவிப்பால் ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0

தற்போது பலரும் வரலாறு படைத்த மாமனிதர்களை நினைவு கூர்ந்து திரைப்படம் எடுத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் சுசி கணேசன் வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையை திரைப்படமாக இயக்கவுள்ளார்.

வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதை:

தற்போது சில இயக்குனர்கள் வரலாற்றில் இடம் பிடித்த நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி கொண்டிருக்கின்றனர். தலைவி, நடிகையர் திலகம் ஆகியவை முதலமைச்சர் ஜெயலலிதா, நடிகை சாவித்திரி ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக எடுக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே மிக பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. தற்போது இதே போல் வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையை இயக்குனர் சுசி கணேசன் திரைப்படமாக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கூட நரேந்திர மோடி ஒருமுறை வேலு நாச்சியாரின் சிறப்புகள் குறித்து பேசினார். இதுவே இவரை வேலு நாச்சியாரின் வாழ்க்கை கதையை திரைப்படமாக இயக்க தூண்டியதாக சுசி கணேசன் கூறியுள்ளார். ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வென்ற வீர மங்கையின் புகழை திரைப்படத்தின் மூலமாக மக்களுக்கு பரப்ப விரும்புகிறேன் என்று சுசி கணேசன் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது யார் என்பதற்கான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here