அரசியல் கட்சி தொடங்கும் லதா ரஜினிகாந்த்?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

தற்போது அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று ரஜினிகாந்த் கடந்த மாதம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். தற்போது அவரது அவரது மனைவி லதா ரஜினிகாந்த் புதிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்:

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் தான் ரஜினிகாந்த். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே தான் அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்து வந்தார். மேலும் தனது படப்பிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு அரசியலில் களமிறங்க ரஜினி திட்டமிட்டிருந்தார். கடந்த டிசம்பர் மாதத்தில் கட்சி பற்றிய தகவல் வெளியாகும் என்று அறிவித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அவர் ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரத்த அழுத்த கோளாறு பிரச்னை இருப்பதாகவும், எனவே அவர் நீண்ட காலம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். இதனை கருத்தில் கொண்டு தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று ரஜினி அறிவித்தார். இதனால் இவரது ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது இவரது மனைவி லதா ரஜினிகாந்த் புதிதாக ஓர் கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுந்தர்யா செய்த வழிபாடு:

ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற இவர்கள் ரஜினிகாந்தின் உடல் நலம் பூரண நலம் பெறவேண்டும் என்று சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் மற்றொரு வழிபாடும் நடத்தியுள்ளனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சிவப்பு உடையில் பின்னழகை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த யாஷிகா – வைரலாகும் புகைப்படம்!!

அது என்னவென்றால் தனது தாயார் லதா ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய கட்சி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், அந்த கட்சி வெற்றி அடைய வேண்டும் என்றும் சிறப்பு வழிபாடை நடத்தியுள்ளனர். இதன்மூலம் லதா ரஜினிகாந்த் புதிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளார் என்னும் தகவல் உறுதியாகியுள்ளது. மேலும் அவரின் புதிய கட்சி குறித்த அதிகாரப்பூரவ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here