டெல்லி விவசாயிகள் போராட்டம் – வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து கைது!!

0

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டி விட்டதாக கூறி நடிகர் தீப் சித்துவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரோடு இணைந்து செயல்பட்டதாக கருதப்படும் மேலும் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

போராட்டத்தில் வன்முறை:

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வடமாநில விவசாயிகள் பல நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஆயிரக்கணக்கான ட்ராக்ட்டர்களையும் உபயோகப்படுத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று அவர்கள் மாபெரும் பேரணியை நடத்த திட்டமிட்டு மத்திய டெல்லிக்குள் ஆயிரக்கணக்கான ட்ராக்ட்டர்களுடன் நுழைய முயன்றனர். அவர்களின் இம்முயற்சியினை டெல்லி போலீசார் தடைகளை அமைத்து தடுத்தனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதோடு தடியடியும் நடத்தப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்ட்டனர். எனவே அவர்கள் அங்கிருந்து நகர்ந்து செங்கோட்டையை முற்றுகையிட்டதுடன் அங்கு பறந்த தேசிய கொடியினை அகற்றி சீக்கிய கொடியினை பறக்க விட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. போராட்டத்தை முன்னின்று நடத்தியதாகவும், வன்முறையை தூண்டியதாகவும் கூறி பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் தீப் சித்து உள்ளிட்ட சிலர் முதல் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் தலைமறைவானதை தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.

சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் – டிடிவி தினகரன் தகவல்!!

இவ்வாறாக சுக்தேவ் என்பவர் நேற்று சண்டிகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று நடிகர் தீப் சித்துவும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here