14 வருடங்களுக்கு பிறகு பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் அஜித் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், தனது அடுத்த படத்தில் தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனருடன் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டுமாக இணையப்போவதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தல 61 அப்டேட்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் தற்போது அஜீத் நடித்துக்கொண்டிருக்கும் 60 வது திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்கு பிறகு அஜீத் மீண்டுமாக அவருடன் ‘வலிமை’ படத்தில் பணியாற்றி வருகிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சேர்ந்து நடிகை ஹுமா குரேஷி மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படம் மே 1 இல் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வேலைகள் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

#INDvsENG டெஸ்ட் – 4 விக்கெட்டை இழந்து திணறும் இந்திய அணி!!

இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜீத்தின் 61 வது படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அஜீத்தை சந்தித்த இயக்குனர் ஏ.எல் விஜய், அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். அந்த கதை அஜீத்துக்கு பிடித்துள்ளதாகவும், அதனால் இருவரும் மீண்டுமாக இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஏ.எல் விஜய் கடந்த 2007ம் ஆண்டு வெளியான அஜீத்தின் ‘கிரீடம்’ படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 14 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டுமாக இணையும் அஜீத் மற்றும் ஏ.எல் விஜய்யின் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here