#INDvsENG டெஸ்ட் – 4 விக்கெட்டை இழந்து திணறும் இந்திய அணி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தற்போது தங்களது முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகின்றனர். இதில் இந்தியா அணி தொடக்கத்திலேயே 4 விக்கெட்டை இழந்து திணறி வருகின்றனர்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி முதலாவதாக டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. இங்கிலாந்து கேப்டன் ரூட் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். அதன்பின்பு களமிறங்கிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 337 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா தரப்பில் பாண்ட் 91 ரன்கள் அதிகபட்சமாக அடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 241 ரன்கள் பின்தங்கி இருந்தது. அதன் பிறகு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. முதல் இன்னிங்ஸை போல் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடவில்லை. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி அஸ்வின் சூழலில் சிக்கியது. அஸ்வினின் அபார பந்து வீச்சினால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

திணறும் இந்தியா:

இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி இந்தியா அணிக்கு 420 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில் இந்தியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. இதிலும் ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதன்பின்பு களமிறங்கிய புஜாரா 15 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

உத்தரகண்ட் மாநில வெள்ளப்பெருக்கில் 27 பேர் பலி – மீட்புப்பணிகள் தீவிரம்!!

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் அரைசதம் அடித்து அசத்தினார். 50 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் அன்டேர்சனிடம் வீழ்ந்தார். அதன்பின்பு களமிறங்கிய ரஹானே டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். தற்போது இந்தியா பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி வருகின்றனர். தற்போது வரை போட்டியின் முடிவு இங்கிலாந்து அணிக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. களத்தில் கோஹ்லி மற்றும் பாண்ட் விளையாடி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் – 98/4

கோஹ்லி – 12*
பாண்ட் – 4*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here