பிப்ரவரி 15க்கு பின் வாகனங்களுக்கு ‘பாஸ்டேக்’ கட்டாயம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

0

சுங்கச்சாவடியில் வரும் 15ம் தேதி முதல் பாஸ்டேக் மூலம் தான் பணம் செலுத்தவேண்டும் என்றும் இதற்கு மேல் கால அவகாசம் நீடிக்க படமாட்டாது என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

பாஸ்டேக்:

சுங்கச்சாவடியில் இனி பண பரிவர்தனையை மேற்கொள்ளாமல் ஆன்லைன் வழிமுறையான பாஸ்டேக் மூலம் இனி சுங்கச்சாவடிகளுக்கு பணத்தை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என்றும், எரிபொருள் பயன்பாடும் குறையும் மற்றும் சுற்றுசூழல் மாசுபாடு குறையும் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் வாகன ஓட்டிகள் இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்பின்பு வாகன ஓட்டிகளுக்கு பாஸ்டேக் பெறுவதற்கு பிப்ரவரி 15ம் தேதி வரை காலாவகாசத்தை வழங்கினர்.

பாஸ்டேக் கட்டாயம்:

தற்போது இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தற்போது ஓர் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் இனி நீடிக்கப்படமாட்டாது என்றும் பிப்ரவரி 15கு மேல் பாஸ்டாக் பெறாதவர்களுக்கு இரு மடங்கு தொகை சுங்கக்கட்டணமாக செலுத்தும் நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் என்று அறிவித்துள்ளனர். மேலும் புதிய மோட்டார் சட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும் நிலையில் இந்த திட்டம் செயல்படுவதில் சிக்கல் எதுவும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் – டிடிவி தினகரன் தகவல்!!

மேலும் வாகன ஓட்டிகள் தங்களது பாஸ்டேக் கணக்கிற்கான QR code ஐ ஸ்கேன் செய்து தங்களது வாகனத்தின் முன் பக்கம் உள்ள கண்ணாடியில் ஓட்டவேண்டும். சுங்க சாவடியில் அதனை ஸ்கேன் செய்து அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து சுங்க கட்டணம் பெறப்படும் என்று தெரிவித்தார். இதன்மூலம் சுங்க சாவடியில் இருக்கும் பணியாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பண பிரச்னை எதுவும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here