உத்தரகண்ட் மாநில வெள்ளப்பெருக்கில் 27 பேர் பலி – மீட்புப்பணிகள் தீவிரம்!!

0

உத்ரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கிய 27 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காணாமல் போன மேலும் 171 பேரை கண்டுபிடிக்கும் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்

கடந்த ஞாயிற்றுகிழமையன்று உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், அதிகாலையில் பனிப்பாறைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த எதிர்பாராத வெள்ளபெருக்கினால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மேலும் தவுலிங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் அப்பகுதியில் இருந்த இரு நீர்மின்நிலையங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய 27 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் 171 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து நீர் மின்நிலையங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சுரங்க பாதைகளில் 30க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியிருக்கலாம் என கருதி மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மீட்பு பணிகளில் இந்தோ-திபெத் எல்லையில் உள்ள பாதுகாப்பது குழுவினரும், தேசிய மற்றும் மாநில மீட்பு குழுவினரும், முப்படைகளின் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நீர் மின்நிலையங்களின் அருகே இருந்த கிராமங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் வெள்ளத்தில் சிக்கியவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலை உள்ளது.

சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் – டிடிவி தினகரன் தகவல்!!

தீடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கிருந்த மற்ற கிராமங்களும் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதால், மக்களின் அத்தியாவசிய தேவைகள் ஹெலிகாப்டரின் மூலம் கொடுக்கப்படுவதாக உத்தரகண்ட் மாநில காவல்துறை அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளதாவது, ‘பல டன் எடை கொண்ட பனிப்பாறைகள் ஒரு இடத்தில் விழுந்து வெள்ளமாக மாறியிருக்கலாம். என்றாலும் இந்த விபத்தின் பின்னணி குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும்’ என கூறினார். மேலும் எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here