அப்போனா போச்சா விஜய் சேதுபதி?? கேள்விக்குறியில் ஜனநாதனின் ‘லாபம்’ திரைப்படம்!!

0

சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த ஜனநாதன் மூளை சாவில் இறந்ததை அடுத்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய லாபம் திரைப்படத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

முன்னணி இயக்குனர்

தமிழ் திரையுலகில் பலர் தங்களது தனித்துவமான இயக்கத்தால் மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்திருப்பர். அப்படி தனக்கு என்று ஒரு தனித்துவமான இயக்கம் மூலமாக பிரபலம் அடைந்தவர் தான், எஸ்பி ஜனநாதன். இவர் அனைத்து இயக்குனர்களும் சாதாரணமான கதைக்களத்துடன் இயக்காமல், கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கி இருப்பார். அதற்கு உதாரணம் தான், அவரது இயற்கை, பேராண்மை, புறம்போக்கு போன்ற திரைப்படங்கள். இவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி ஒரு நல்ல நடிகரும் கூட.

கிளாமரில் மிரட்டும் பிக்பாஸ் கேபிரியல்லா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

இப்படியாக இருக்க யார் இட்ட சாபமோ மிக சிறிய வயதில் மூளை சாவு அடைந்து விட்டார். இதில் கொடுமை என்னவென்றால், அவர் கேட்பாரின்றி தனது வீட்டில் இருந்ததாகவும், அவரை அவரது உதவி இயக்குனர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரது மரணத்தை தொடர்ந்து பலரும் தங்களது இரங்கலையும் வருத்தத்தினையும் தெரிவித்து வருகின்றனர். நடிகரான டி ராஜேந்தர் தனது இரங்கலை கொஞ்சம் வித்தியாசமாக தெரிவித்துள்ளார். “இயற்கை க்கு மாறுபடாமல் நல்ல கருத்துக்களை தரும் ஈதல் குணம் மருவி கெடாமல், சொல்ல வந்த கருத்துக்களை பரப்புவதில் என் போக்கு தனி போக்கு பொது மக்களின் சொத்து ஆகிவிடாது புறம்போக்கு என இலட்சியத்தோடு படங்களை இயக்கி கொண்டிருந்த இயக்குனர் S.P.ஜனநாதன் அவர்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த லாபம். அவரது மறைவு என்பது காலனே இது யார் இட்ட சாபம்? இயக்குனர் S.P.ஜனநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது இப்படியாக இருக்க எஸ்பி ஜனநாதன் தற்போது இயக்கி வந்த திரைப்படம் தான் “லாபம்” இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்னும் முடிவுறாத நிலையில் இந்த திரைப்படத்தினை இனி யார் எடுத்து இயங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது மட்டுமின்றி அந்த படத்தில் பணியாற்றிய பணியாளர்களின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here