முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் – எல் முருகன் பேட்டி!!

0
l murugan
l murugan

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் யார் என்பதை விரைவில் பாஜக தலைமை அறிவிக்கும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணி மற்றும் பிரச்சார பணிகள் போன்றவற்றை ஆரம்பித்து விட்டனர். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை விரைவில் பாஜக தலைமை அறிவிக்கும் என்று பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 21% ஆக அதிகரிப்பு !!

மேலும் தனது கூட்டணி கட்சியான அதிமுக தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்திருந்தாலும், பாஜக தலைமையே இதனை முடிவு செய்யும் என்று அவர் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் கூறியுள்ளார். மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர், தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமால்லாமல் இந்த பயணத்தின் போது விவசாயிகளிடம் வேளாண் சட்டத்தின் நன்மைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here