அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 21% ஆக அதிகரிப்பு – சம்பளம் உயர வாய்ப்பு!!

0
Salary
Salary

மத்திய அரசு அதன் துறை ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்தப்படும் என்று முடிவு செய்துள்ளது. இதனால் பயன்பெற உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டது. இதற்கு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசவை அதற்கு ஒப்புதல் அளித்தது . அதன் பின் கொரோனா காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்தது. இதனால் மத்திய அரசு இந்த உயர்வை கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்திவைத்து. அடுத்த ஆண்டு ஜூலை வரை 17 சதவீதம் தான் அகவிலைப்படி என்று கூறியது . அதே போல் 17 சதவீதம் தான் வழங்கி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

salary
salary

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘பொங்கல் பரிசாக’ ரூ.2500!!

இதனால் சுமார் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பாதிப்பு அடைந்தனர். தற்போது நம் பொருளாதாரம் மீண்டு வருவதால் அடுத்த ஆண்டு முதல் 21 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here