கர்ப்பிணித்தாய் மூலம் குழந்தைக்கு கொரோனா பரவுமா?? ஆய்வு முடிவுகள் வெளியீடு!!

0

கொரோனா பாதித்த கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாது என்று சிங்கப்பூரில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து அது தொடர்பாக பல ஆய்வுகள் உலகம் எங்கும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் கொரோனா பாதித்த கர்பிணிப் பெண்களை வைத்து ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்ற நோய்களால் பாதிக்கப்படுவது மற்றவர்களை காட்டிலும் குறைவாகவே உள்ளது என்று கண்டுபிடித்து உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

16 பெண்களை வைத்து மட்டுமே நடைபெற்ற இந்த ஆய்வில், கொரோனா பாதித்த தாயிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு தொற்று பரவாது என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிறக்கும் குழந்தைக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் இயற்கையாகவே உள்ளதும் தெரியவந்துள்ளது.

pregnant lady affected by corona

கொரோனா வைரசை பற்றிய ஆய்வுகள் இன்னும் முழுமையாகாத நிலையில், வைரஸ் பரவல் குறித்து இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. கொரோனா பாதிப்பு உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சுவாசத் தொற்றுகள், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆயினும் கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா தொற்று பரவாது என்றும் உறுதியாக சிங்கப்பூர் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மீண்டும் ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த இந்தியா திட்டம்!!

இந்த சிங்கப்பூர் ஆய்வில் பங்கேற்ற வயது குறைந்த பெரும்பாலான பெண்களுக்கு மிகவும் லேசான தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் எடை அதிகமுள்ள மற்றும் வயது முதிர்ந்த பெண்களுக்கு கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களும் குணமடைந்து விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here