இந்த கும்பகோணத்து கடப்பா ரெசிபி போதும்., இட்லி தோசைக்கு பக்கா காமினேஷன்., சுவையும் தாறுமாறா இருக்கும்!!

0
இந்த கும்பகோணத்து கடப்பா ரெசிபி போதும்., இட்லி தோசைக்கு பக்கா காமினேஷன்., சுவையும் தாறுமாறா இருக்கும்!!
இந்த கும்பகோணத்து கடப்பா ரெசிபி போதும்., இட்லி தோசைக்கு பக்கா காமினேஷன்., சுவையும் தாறுமாறா இருக்கும்!!

பொதுவாக இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட தேங்காய் மற்றும் தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இதற்கு பதிலாக தாறுமாறான சுவையில் கும்பகோணத்து கடப்பா ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் தூள் – 1 கப்
  • கசகசா -1 டீஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • இஞ்சி – சிறிதளவு
  • வெள்ளைப் பூண்டு – 4
  • பச்சை மிளகாய் – 3
  • பொரிகடலை – 2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • உருளைக்கிழங்கு – 2
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
  • பட்டை, கிராம், சோம்பு – சிறிதளவு

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்;

இந்த கும்பகோணத்து கடப்பா ரெசிபி சமைப்பதற்கு 150 கிராம் பாசிப்பருப்பு ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மேலும் பின்னர் அதை கழுவிக் குக்கரில் போட்டு அதோடு 2 பெரிய சைஸ் உருளை கிழங்கை தோல் நீக்கி சேர்த்து, 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் தூள் ஒரு கப், கசகசா, சோம்பு, சிறிதளவு இஞ்சி ,4 வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய், பொரிகடலை சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

ஆசிய கோப்பையில் களமிறங்கத் தயாரான இந்திய அணி…, போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!

இதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம், சோம்பு போட்டு தாளிக்கவும். பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் வேகவைத்த பாசிப்பருப்பை அதில் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் நாம் மறைத்து வைத்துள்ள பேஸ்ட்டையும் அதில் ஊற்றி 20 நிமிடங்கள் கொதிக்க விடவும். மேலும் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சாம்பாரில் கிள்ளி போட்டு அடுப்பை ஆப் செய்யவும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here