சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!!

0

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வழக்கத்திற்கு மாறாக பல கட்டுப்பாட்டுகளை கேரள அரசு விதித்துள்ளது. அதன்படி ஆன்லைனில் விண்ணப்பித்த 2000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வருகிற டிசம்பர் 20-தேதி முதல் 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதாக தேவஸ்தானம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பக்கதர்களுக்கு அனுமதி:

உலகத்தைய அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது சபரிமலை மண்டல பூஜை சீசன் என்பதால் மக்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக வார நாட்களில் 2000 பக்தர்களுக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் 3000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கபட்டது. தற்போது டிசம்பர் 20-தேதி முதல் தினசரி 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது??

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கேரள அரசு மற்றும் கோவில் தேவஸ்தானம் இணைந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் கோவிலுக்கு செல்லும் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் 10 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளும், 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கும் அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here