மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!!

0
vanitha vijayakumar latest instagram pics
vanitha vijayakumar latest instagram pics

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டு பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார் வனிதா. இவர்களின் பிரேக்கப் பிரச்சனை தான் சமூக வலைத்தளங்களில் பரவலானது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வனிதா

நடிகர் விஜயகுமாரின் மகளாகிய வனிதா சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவருக்கு முதல் திருமணம் மனக்கசப்பில் முடிந்ததால் விவாகரத்து வரை சென்றது. அதன் பின் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருடன் ஒத்துப்போகாமல் இருக்கவே வேறு வழியின்றி அவரையும் விவாகரத்து செய்து கொண்டார்.

ஆரியை மட்டுமே டார்கெட் செய்து வரும் அர்ச்சனா!!

தனக்கு வரவேண்டிய சொத்தை தனது அப்பாவும், அண்ணனும் அபகரித்ததாக குற்றமும் சாட்டினார். குடும்பமே வனிதாவுக்கு எதிராக நின்றது. அடுத்து இவர்களின் பேச்சே இல்லாமல் போனது. அடுத்து தான் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார். அடுத்தடுத்த நாட்களில் அவரின் பட்டாசு போன்ற பேச்சும் அதிரடியான நடவடிக்கையும் அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. ஆரம்பத்தில் அவரை திட்டி வந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள தான் செய்தனர்.

ஆனாலும் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்று வரும் நேரத்தில் சடாலென பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியாக்கியது. இதனால் பலரும் திட்டவும் செய்தனர். ஆனாலும் யாரையும் கண்டு கொள்ளாமல் பீட்டர் பாலுடன் பல விடீயோக்களை எடுத்து வெளியிட்டார். அதன் பிறகு கோவா சென்று வந்த பிறகு இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை உறுதிபடுத்தும் விதமாக அவரே வீடியோ வெளியிட்டார். இந்த பிரேக்கப் பிறகு சில நாட்களிலேயே பழைய நிலைக்கு திரும்பி உள்ளார் என்றே சொல்லலாம். இப்பொழுதெல்லாம் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்பொழுது மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேக்கப் போடவில்லை என்று சொல்லி லிப்ஸ்டிக் உடன் வெளியிட்டுள்ளார். இந்த வயதில் இதெல்லாம் தேவையா? என்பது போல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here