கேரளாவின் மாஸ்டர் பிளான் – 56 % கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர்.! பினராயி விஜயன் பெருமிதம்.!

0

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். புதிதாகக் கொரோனா பாதிப்புக்கு உள்ளவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கேரளா, தற்போது, 9ம் இடத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பினராயி விஜயன்

முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது “கேரள மாநிலம் முழுவதும் 387 பேருக்குக் கொரோனா ஏற்பட்டது; அதில், 167 பேர் இப்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 218 பேருக்கு கொரோனா பூரணமாகக் குணமாகியுள்ளது. கொரோனா பாதித்ததில், 264 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 8 பேர் வெளிநாட்டினர். 114 பேருக்குத் தொடர்பு மூலம் கொரோனா ஏற்பட்டுள்ளது.

Coronavirus kerala cases: 12 fresh positive coronavirus cases in ...

கேரளாவில் தற்போது, 97,464 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 522 பேர் மருத்துவமனைக் கண்காணிப்பில் உள்ளனர். பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்குகிறோம். அது நல்ல பலனை அளித்து வருகிறது.

First Indian case of coronavirus in Kerala

இதனால், 56 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். விரைவில் 100 சதவீத நோயாளிகளைக் குணப்படுத்துவோம். இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலமாக கேரளம் மாறியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா தாக்கத்தில் இந்தியாவில் முதல் இடத்தில் இருந்த கேரளா தற்போது 9ஆம் இடத்தில் உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here