தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இன்னும் வெளிவராமல் இருந்தது. தற்போது நிச்சயதார்த்தத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
காஜல் அகர்வால்
முதன்முதலில் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானவர் தான் காஜல் அகர்வால். தமிழில் பொம்மலாட்டம் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தெலுங்கில் நடித்த மகதீரா திரைப்படமே இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.
மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. தமிழில் துப்பாக்கி, ஜில்லா, விவேகம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. மேலும் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.
டாப் மார்க்கெட்டில் இருந்த இவருக்கு பட வாய்ப்புகள் குறையவே ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் எப்பொழுது என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இவரது தங்கையான நிஷா அகர்வாலுக்கு திருமணம் ஆகி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
அண்மையில் காஜலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. இது வெறும் வதந்தி என நினைத்த நமக்கு இன்ப அதிர்ச்சியாக அவரின் திருமண நாளும் அவரின் வருங்கால கணவரின் புகைப்படமும் வெளியானது. மேலும் காஜல் தனது திருமண அழைப்பிதழை தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டார்.
வரும் அக்டோபர் 20 இல் அவருக்கு திருமணம் ஆக உள்ள நிலையில் தனது வருங்கால கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலானது. தற்போது அவரின் நிச்சயதார்த்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.