மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி?? தமிழக அரசு பரிசீலனை!!

0

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை தமிழக அரசு ரத்து செய்ததை அடுத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய கடன்களையும் ரத்து செய்ய பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள்

தமிழகத்தில் மாநில கூட்டுறவு வங்கியின் கீழ் விவசாயிகளுக்கான பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், நகைக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் கூட்டுறவு வங்கியிலிருந்து விவசாயிகள் பெற்ற 110 கோடி ரூபாய் பயிர்க்கடனை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகளுக்கும் ரசீது வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதைப்போல கூட்டுருறவு வங்கியில், ஒரு குழுவுக்கு 20 பேர் வீதம் உள்ள மகளிர் குழுக்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு ஆண்டு வட்டியாக 11 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 4.28 லட்சம் குழுக்களுக்கு 8,017 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிக்கூட்டம், பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்கும், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு பணம், புடவை உள்ளிட்ட பொருட்களுடன், வங்கிகளில் எளிதாக கடன் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை செய்து வருகிறது தமிழக அரசு.

மெட்ரோ ரயிலின் கட்டணம் குறைப்பு – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகளுக்கான பயிர்க்கடனை ரத்து செய்த அரசு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய கடன்களையும் ரத்து செய்ய பரிசீலித்து வருகிறது. இதற்காக கூட்டுறவு வங்கியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன் தொகை விபரங்களை கூட்டுறவுத்துறை பெற்று வருகிறது.

இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சட்டசபை இடைக்கால பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படவுள்ளது. அப்போது கூட்டுறவு வங்கியில் உள்ள கடன் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு பதிலளிக்க, கடன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடன்களை ரத்து செய்வது தொடர்பாக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here