ஐபிஎல் 2023 முடிஞ்சு 2 நாள் தா ஆகுது…, அதுக்குள்ள அடுத்த லீக்கா?? வெளியான மாஸ் அப்டேட்!!

0
ஐபிஎல் 2023 முடிஞ்சு 2 நாள் தா ஆகுது..., அதுக்குள்ள அடுத்த லீக்கா?? வெளியான மாஸ் அப்டேட்!!
ஐபிஎல் 2023 முடிஞ்சு 2 நாள் தா ஆகுது..., அதுக்குள்ள அடுத்த லீக்கா?? வெளியான மாஸ் அப்டேட்!!

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் லீக் போல, தமிழகத்தை மட்டும் மையமாக கொண்டு TNPL லீக் தொடர் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சீசனை கடந்துள்ள இந்த லீக் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது, ஐபிஎல் 16 வது சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், வரும் ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை TNPL தொடர் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

7 வது சீசனை எதிர்நோக்கி உள்ள இந்த தொடரில், பங்கு பெற உள்ள 8 அணிகள் ரவுண்ட்-ராபின் மற்றும் பிளே-ஆஃப்கள் முறைகளில் 32 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த போட்டிகள் அனைத்தும் சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மைதானங்களை மையமாக கொண்டே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை TNPL போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறாது எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நரக வாழ்க்கையில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டேன்.., திருமணம் குறித்து விஷ்ணு காந்த வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

அதாவது, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடர் முடிவடைந்ததையடுத்து LED விளக்குகள் சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் TNPL போட்டிகள் இந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் கடைபிடிக்கப்பட்ட ‘இம்பாக்ட் பிளேயர்’, ‘DRS’ முறை ரிவ்யூ உள்ளிட்ட புதிய விதிகளும் TNPL-லில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here