5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை – சாதனை படைத்த ஐபோன்!!

0

உலகில் 5 ஜி ஸ்மார்ட் போன் விற்பனையில் ஐ போன் அதிகமாக விற்பனை செய்த நிறுவனம் என்று சாதனை செய்துள்ளது.

ஐ போன் 

தற்போது அனைத்து நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் விற்பனை சந்தையில் தனது 5 ஜி ஸ்மார்ட்போன்களை விட்டுள்ளது. இதில் ஆப்பிள் ஐ போன் திட்டமிட்டதை விட தாமதமாக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த அக்டோபர் மாதத்தில் 5ஜி போன் விற்பனையில் 4 இல் ஒரு பங்கு ஐபோன் மற்றும் ஐபோன் ப்ரோ இடம் பிடித்து அசத்தியுள்ளது.

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி – இந்திய தேர்தல் ஆணையம்!!

இதனை கவுண்டர் பாயிண்ட் ரிசெர்ச் என்னும் நிறுவனம் ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டது. இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் மிஸ்ரா இதை பற்றி கூறியதாவது பண்டிகை காலங்களில் ஐ போன்களின் தேவை மிகவும் அதிகமாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் மாதத்தில் அதிக விற்பனையான சாம்சங் கேலக்சி நோட் 20 அல்ட்ரா 3வது இடத்திற்கு பின் தங்கியது. மேலும் அடுத்த ஆண்டு ஐ போன் சீரிஸ் மாடல் சந்தைக்கு வரவுள்ளதால் ஆப்பிள் ஐ போன் விற்பனை மேலும் உயரும் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here