முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி – இந்திய தேர்தல் ஆணையம்!!

0

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதியாக தபால் வாக்கு ஏற்பாடு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணைய செயலர், உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்திவரும் தேர்தல் ஆணைய குழுவினர், முன்னதாக அதிமுக , திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களது கருத்துகளை கேட்டறிந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திமுகவின் சார்பில் பணப் பட்டுவாடாவை கண்காணித்து தடுக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வழங்கக் கூடாது என்பன போன்ற 11 கோரிக்கைகள் இக்குழுவினரிடம் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உமேஷ் சின்ஹா, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு வசதி செய்து தரப்படும். வாக்கு சாவடியில் சாய்வு தளம், கழிவறை, மருத்துவ வசதி ஆகியவை செய்து தரப்படும் எனவும், ஒரு வாக்கு சாவடியில் 1000 பேருக்கு மேல் கூடாமலிருக்க கூடுதல் வாக்கு சாவடிகள் அமைக்கப்படுமென்றும், விருப்பமுள்ள முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் வாக்கு வசதியை உபயோகித்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

மின் துண்டிப்பா?? அப்போ ரூ.1 லட்சம் இழப்பீடு!!

திமுக வின் வேண்டுகோளை நிராகரித்து 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு வசதி ஏற்படுத்தி தரப்படும் என்ற தேர்தல் ஆணைய செயலாளர் கூறியிருப்பது, அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here