கலர் கலரான உடையில் நடனமாடும் சமந்தா – ட்ரெண்டாகும் வீடியோ!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் சமந்தா. விதவிதமான ஆடைகளை அணிவதில் ஆர்வமுள்ள சம்மு தொடர்ந்து பல வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது பலவகையான உடையில் ஒரே ஷாட்டில் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமந்தா

தற்போது திரையுலக பிரபலங்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலில் டிக்டாக் இருந்த காலத்தில் அனைவரும் பல விதமான பாடலுக்கு டிக்டாக் செய்து பிரபலமடைந்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திரையுலகினர் கூட இந்த அளவிற்கு பிரபலமடைந்தது கிடையாது. ஆனால் முகம் தெரியாதவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். அதன் பிறகு இப்பொழுது இன்ஸ்டாகிராம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை அனைத்து நடிகைகளும் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் தனது விதவிதமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டும் வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நாகசைதன்யாவுடன் பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றிருந்தார். அங்கு தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

பிகினி உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் கூட பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் கொதித்தெழுந்தவர்கள் சமந்தா இப்படி எல்லாம் செய்யலாமா?? என அட்வைஸ் செய்தும் வந்தனர். ஆனால் சமந்தா அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

மேலும் மாலத்தீவில் இருந்து வந்த சமந்தா தான் பிகினி உடையில் எந்த புகைப்படங்களையும் வெளியிடவில்லை என்றும், எந்த நடிகருடனும் நெருக்கமாக கூட நடித்ததில்லை எனவும் பேட்டியளித்திருந்தார். என்னதான் சமந்தாவை திட்டி தீர்த்தலும் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் பிரபலமாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பல விதமான ஹாட்டான உடையில் டான்ஸ் ஆட்டியவாறு வீடியோவை பதிவிட்டுள்ளார். சமந்தாவா இது?? என வியந்து பார்க்கும் அளவிற்கு கலர் கலரான உடையில் மின்னுகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here