ஆவி பறக்க இட்லி, தோசைக்கு பருப்பு போடாத சாம்பார்., இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை வேற லெவலில் இருக்கும்!!

0
ஆவி பறக்க இட்லி, தோசைக்கு பருப்பு போடாத சாம்பார்., இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை வேற லெவலில் இருக்கும்!!
ஆவி பறக்க இட்லி, தோசைக்கு பருப்பு போடாத சாம்பார்., இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை வேற லெவலில் இருக்கும்!!

பொதுவாக நம் பாசி பருப்பு அல்லது துவரம் பருப்பில் சாம்பார் வைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் பருப்பு போடாமல் தரமான சுவையில் சாம்பார் செய்து அசத்துவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. இந்த சாம்பாரை சுட சுட இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்;

  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கடுகு, உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2
  • கடுகு, உளுத்தம்பருப்பு – 1
  • வரமிளகாய் – 5
  • பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • பொட்டுக்கடலை – 50 கிராம்
  • அரிசி – 1 டீஸ்பூன்
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • தக்காளி – 2
  • பெரிய வெங்காயம் – 1
  • பூண்டு – 4

செய்முறை விளக்கம்;

இந்த சாம்பார் தயாரிப்பதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளவும். அதில் 1 டீஸ்பூன் அரிசி, 1 டீஸ்பூன் மல்லி தூள், 1/2 டீஸ்பூன் மிளகு, 1/4 டீஸ்பூன் சீரகம், 5 வர மிளகாய், 50 கிராம் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

மேலும் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். மேலும் அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் நான்கு பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும். இதோடு சிறிதாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.

அரசு ஊழியர்களே ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி இம்மாதம் உயர்வது உறுதி?? வெளியான மாஸ் அப்டேட்!!

மேலும் அதில் 1/ 2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரையும் ஊற்றிக் கொள்ளவும். இதோடு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் இதில் சேர்த்து நன்றாக கிண்டி விட்டு மூடி போட்டு கடாயை மூடவும். அதன் பின் சாம்பார் நன்றாக கொதித்து வரும்போது கொத்தமல்லி இலைகளை போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நமக்கு சுவையான பருப்பு போடாத சாம்பார் ரெடி. இதை சுட சுட இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here