சாதனைகளை குவிக்க காத்திற்கும் ஹிட் மேன்…, ஆசிய கோப்பை மூலம் ஒருநாள் அரங்கில் உச்சத்தை அடைவாரா??

0
சாதனைகளை குவிக்க காத்திற்கும் ஹிட் மேன்..., ஆசிய கோப்பை மூலம் ஒருநாள் அரங்கில் உச்சத்தை அடைவாரா??
சாதனைகளை குவிக்க காத்திற்கும் ஹிட் மேன்..., ஆசிய கோப்பை மூலம் ஒருநாள் அரங்கில் உச்சத்தை அடைவாரா??

சர்வதேச இந்திய அணியானது, ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசனில் தனது முதல் போட்டியை நாளை (செப்டம்பர் 2) பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த தொடரின் மூலம், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா மாபெரும் சாதனை ஒன்றை படைக்க தயாராக உள்ளார். அதாவது, சர்வதேச அளவிலான ஒருநாள் அரங்கில், இவர் இன்னும் 163 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் 6 வது இந்திய வீரர் மற்றும் 15 வது சர்வதேச அளவிலான வீரர் என்ற பெருமையை அடைவார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுவரை, இவர் 237 இன்னிங்ஸில் 3 இரட்டை சதம், 30 சதங்கள் மற்றும் 48 அரைசதங்கள் உட்பட 9837 ரன்களை குவித்துள்ளார். இதில், 901 பவுண்டரிகளும், 275 சிக்ஸர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒருநாள் அரங்கில் அதிக சிக்ஸர்களை விளாசிய 3 வது சர்வதேச வீரராகவும் முதல் இந்திய வீரராகவும் இவர் திகழ்கிறார்.

ஒருநாள் அரங்கில் 10000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள்:

  • சச்சின் டெண்டுல்கர் – 18426 ரன்கள்
  • விராட் கோலி – 12650 ரன்கள்
  • சவுரவ் கங்குலி – 11363 ரன்கள்
  • ராகுல் டிராவிட் – 10889 ரன்கள்
  • எம் எஸ் டோனி – 10773 ரன்கள்

சூப்பர் ஓவரில் சூறாவளியாக மாறிய ரிங்கு சிங்…, சும்மா சிக்ஸர்களை விளாசிய அதிரடி வீடியோ உள்ளே!!

ஒருநாள் அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:

  • பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி – 351 சிக்ஸர்கள்
  • வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் – 331 சிக்ஸர்கள்
  • இந்தியாவின் ரோஹித் சர்மா – 275 சிக்ஸர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here