சமீபகாலமாக நாடு முழுவதும் பல்வேறு வகையான டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவை மையமாகக் கொண்டு நடத்தப்படும் ஐபிஎல் தொடரை போல, உத்தரபிரதேசத்தில் டி20 லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐபிஎல் நட்சத்திர வீரர்களும் பங்குபெற்றுள்ளனர். இந்த தொடரில், காசி ருத்ரர்கள் அணியை எதிர்த்து ரிங்கு சிங்கின் மீரட் மேவரிக்ஸ் அணி நேற்று மோதியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், முதலில் பேட்டிங் செய்த காசி ருத்ரர்கள் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மீரட் மேவரிக்ஸ் அணியும் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. போட்டி சமமானதை அடுத்து, சூப்பர் ஓவர் சுற்றை நோக்கி போட்டி நகர்ந்தது. இதில், காசி ருத்ரர்கள் ஒரு ஓவரில் 16 ரன்கள் குவித்தன. இந்த இலக்கை துரத்தி களமிறங்கிய மீரட் மேவரிக்ஸின் ரிங்கு சிங் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி 18 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இவ்வாறு, ஒவ்வொரு போட்டியின் மூலமும் தன்னை ஒரு பிணிஷாராக நிரூபித்த வண்ணமே ரிங்கு சிங் உள்ளார்.
உலக செஸ் தரவரிசை வெளியீடு: முன்னேற்றம் கண்ட இந்தியாவின் பிரக்ஞானந்தா!!
Palak na jhapke 😴 nahin toh miss hojayenge #RinkuSingh 🔥 ke zabardast 6⃣6⃣6⃣#AbMachegaBawaal #JioUPT20 #UPT20onJioCinema pic.twitter.com/vrZuMqPn9D
— JioCinema (@JioCinema) August 31, 2023