Saturday, May 4, 2024

இந்தியாவில் 600 எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கம் நிறுத்தம்?? பயணிகள் ஷாக்!!

Must Read

பயணிகள் ரயில்களுக்கான புதிய அட்டவணை ரயில்வேத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றது, இதில் 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொது போக்குவரத்தான ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 4 முதல் 5 மாதங்கள் முடிவடைந்ததால் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, கடந்த மாதம் பல ரயில்கள் ரயில்வேத்துறை சார்பில் இயக்கப்பட்டன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டன. தற்போது, ரயில்வே அமைச்சகம் சார்பில் புதிய அட்டவணை ஒன்று தயாரிக்கப்படவுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, 360 பயணிகள் ரயிலானது மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயிலாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அதே போல் 120 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சூப்பர் பாஸ்ட் ரயிலாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

ரயில்வே வாரியத்தலைவர் தகவல்:

தற்போது பயணிகள் போக்குவரத்தில் ரயில்வேத்துறை நஷ்டத்தை சந்தித்து வருவதால் நிதி நிலைமையை மேம்படுத்த இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்!!

இது குறித்து ரயில்வேத்துறை தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்ததாவது,”கொரோனா பரவல் தொடர்ந்து நீடிப்பதால் புதிய அட்டவணை எப்போது அமலுக்கு வரும் என்று கூற முடியாது. வழக்கம் போல் எப்போது ரயில்கள் இயக்கப்படுமோ அப்போது புதிய அட்டவணை அமலாகும்”என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -