சீன பொருட்களை புறக்கணிக்க முடியுமா..? இந்திய நிறுவனங்களின் நிலைப்பாடு என்ன..!

0
செல்லுலார் ஆபரேட்டர்கள்
செல்லுலார் ஆபரேட்டர்கள்

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு அடுத்து இந்த இந்தியா-சீனா எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து சீன பொருட்களை மக்கள் புறக்கணித்து வரும் நிலையில், அரசின் புவிசார் அரசியல் பிரச்சினைகளை கார்ப்பரேட் விவகாரங்களுடன் தொடர்புபடுத்தக்கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை

ஒரு மாதத்திற்கு மேலாக இந்த இந்தியா-சீனா எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஜூன் 15 இல் லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழிந்தனர். மேலும் சீனா தரப்பிலும் அதிக உயிர் சேதம் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. மேலும் சீனா பொருட்களை புறக்கணிக்க மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்

made in china
made in china

உ.பி மாநிலத்தில் ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களின் பயன்பாட்டை நிறுத்த இந்திய ரயில்வே முடிவுசெய்துள்ளது. சீன உபகரணங்களின் பயன்பாட்டை குறைக்கும்படி பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

செல்லுலார் ஆபரேட்டர்கள் 

இதனை தொடர்ந்து சீன உபகரணங்களை நிறுத்தும் படி மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை பரிசீலித்து வருகிறது. இதனை பற்றி இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் பொது இயக்குநர் ராஜன் மேத்யூஸ் பேசுகையில்,“புவிசார் அரசியல் பிரச்சினைகள் அரசு சம்பந்தப்பட்டது. இப்பிரச்சினைகள் குறித்து எடுக்கப்படும் முடிவுகள் வித்தியாசமானவை. புவிசார் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தக முடிவுகளுடன் தொடர்புபடுத்தக்கூடாது.

ஒரு முடிவை அரசு சட்டமாக இயற்றினால் அதை கடைப்பிடிக்க வேண்டியது நிறுவனங்களின் கடமை. இதுவரை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு தடை விதிக்கும் வகையில் அரசு எந்த சட்டமும் அமல்படுத்தவில்லை” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here