Home விளையாட்டு ஐசிசி தலைவர் கங்குலி..? போட்டியின்றி தேர்வானதாக தகவல்..!

ஐசிசி தலைவர் கங்குலி..? போட்டியின்றி தேர்வானதாக தகவல்..!

1
ஐசிசி தலைவர் கங்குலி..? போட்டியின்றி தேர்வானதாக தகவல்..!
Ganguly

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஐசிசி வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

ஐசிசி தலைவர்:

இந்தியாவின் சஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்ததாக தலைவர் பதவிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஈசான் மானி போட்டியிட இருந்தார். இந்நிலையில் ஈசான மானி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்காத காரணத்தால், ஐசிசி தலைவராக இந்தியாவின் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Ganguly
Ganguly

இது குறித்து தெரிவித்து உள்ள ஈசான் மானி, ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடுமாறு என்னை இந்தியாவில் இருந்து சிலர் கேட்டனர். ஆனால் நான் போட்டியிடவில்லை. தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிடுகிறாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. 2006ம் ஆண்டுக்கு பிறகு எனக்கு ஐசிசி பக்கம் போக விருப்பமில்லை. தற்போது இம்ரான் கான் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு சேவையாற்றுமாறு கூறியுள்ளார். எனவே ஐசிசி தலைவர் போட்டியில் நான் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளார்.

வங்கிகள் தங்களின் செலவை குறைத்துக்கொள்ள வேண்டும் – மத்திய அரசு உத்தரவு.!

முறைப்படி ஐசிசி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் பொழுது, கங்குலி தேர்வானது குறித்து தெரிவிக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறி வருகின்றன.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here