ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை- இந்தியா ராணுவம் அதிரடி…!

0
jammu kashmir 24 hrs 8 terrorists dead
jammu kashmir 24 hrs 8 terrorists dead

ஜம்மு காஷ்மீரில் அவந்திப்புரா பகுதியில் இருக்கும் மீஜில் பாதுகாப்புபடையினர் நேற்று  சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அந்நேரம் அங்கு பதுங்கிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டத்தில் ஒரு பயங்கரவாதி கொல்லபட்டார்.

இந்திய அரசு & வங்கிகள் இணையதளத்தை ஹேக் செய்ய சீனா முயற்சி – இந்தியா முறியடிப்பு..!

24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அவந்திப்புரா அருகே  இருக்கும் மீஜ் கிராமத்தில் பாதுகாப்புபடையினர்  தீவிரவாதிகளை சுட்டுக் கொலை செய்தனர்.5 தீவிரவாதிகள் சோபியான் மாவட்டம் முனந்த் கிராமத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அப்பகுதி கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.தகவலை பெற்ற போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதலில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள்  பாதுகாப்பு படையினரை கண்டதும் தாக்குதலை நடத்தினர்.அப்போது பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் சரியான பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் 2 தீவிரவாதிகள் அருகில் இருந்த மசூதிக்குள் பதுங்கினர். பாதுகாப்பு படையினர் மசூதியை சுற்றி வளைத்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

jammu kashmir 24 hrs 8 terrorists dead
jammu kashmir 24 hrs 8 terrorists dead

இன்று அதிகாலையில் மசூதிக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் தீவிரவாதிகள் வெளியேறினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது,கடந்த 24 மணி நேரத்தில் ஷோபியனில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அதே சமயம் புல்வாமாவில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.8 தீவிரவாதிகள்  சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here